சீனிகம பகுதியில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு!

3 hours ago

தங்காலை சீனிகம பகுதியில் 5 கிலோகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காலி, அஹங்கம, தெல்வத்த, வதுகெதர மற்றும் சீனிகம பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சீனிகம பகுதியில் 6கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்