போதைப்பொருள் படகு தொடர்பில் விசாரிக்க மாலைத்தீவுக்கு சென்ற இலங்கை விசேட குழு!

4 hours ago

மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை ஏற்றிச் சென்ற கப்பல் மற்றும் அதிலிருந்த மீனவர்கள் 6 பேர் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பிரவின் விசேட குழு ஒன்று மாலைத்தீவுக்கு சென்றுள்ளது.

சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பயணித்த மீன்பிடி கப்பல் ஒன்று மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்டது

பாகிஸ்தானில் இருந்து நாட்டிற்கு கடத்திவரப்பட்ட போதைப்பொருளை ஏற்றிச் சென்ற கப்பல், மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கை வழங்கிய புலனாய்வு தகவலின் அடிப்படையில், மாலத்தீவு கடற்படை சர்வதேச கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பலை கைப்பற்றியது.

இந்த நிலையில் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கப்பல் மற்றும் மீனவர்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் அடங்கிய குழு மாலைத்தீவு க்குச் சென்றுள்ளது.

குறித்த கப்பல் தற்போது மாலத்தீவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான தெஹிபாலேவின் திட்டமிடலில் குறித்த போதைப்பொருள் தெற்கு கடற்கரை மார்க்கத்தில் நாட்டிற்குள் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.