இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் குழுவினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான கூட்டணி குறித்து இந்திய புலனாய்வு அமைப்பு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாவூத் இப்ராஹிம் குழுவினர் போதைப்பொருள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் விடுதலைப் புலிகளின் வலையமை புதுப்பித்து போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இந்த குழு தொடர்பில் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் வட மாநிலங்களில் உள்ள இந்த குழுவினர் தற்போது இலங்கையை குறி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
எனவே இலங்கை ராணுவத்தினால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு, இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தாங்கள் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் மீண்டும் விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் இந்திய புலனாய்வு அமைப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
எனவே இது ஒரு அபாயகரமான இணைவாகும் என இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.
இந்தநிலையில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பிற உளவுப் பிரிவுகள் இந்தக் கூட்டணியின் நிதி பரிமாற்றங்கள் மற்றும் தகவல் தொடர்புகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதுடன், தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவுகளைச் சுற்றி கடலோர கண்காணிப்புகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.











