கொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையபெண்ணொருவர் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 பொலிஸ் குழுக்கள் ஊடாக விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கறுப்புநிற காரில் வருகைதந்த குழுவினர் கொழும்பு கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கை பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
கறுப்புநிற காரில் பயணித்த அடையாளந்தெரியாத குழுவினரில் ஒருவர் காரில் இருந்து இறங்கி வீதியில் பயணித்த நபர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று இவ்வாறு துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளார்.
துப்பாக்கி சூடு நடாத்தியதைத்டதொடர்ந்து குறித்த நபரின் மீது காரினை செலுத்தி தாக்குதல்தாரிகள் கடந்து சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் புகுடு கண்ணாவின் நெருங்கிய உறவினர் என்பதுடன் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பழனி ரெமோஷவின் உதவியாளரான செல்வி என்பவரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.
போதைப்பொருன் கடத்தல்தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் நிலவிவந்த தகராரே கொலைக்கு காரணியாகும் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை கொலைசம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்
துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் நேற்று ஆமர்வீதிபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 2 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில் மானிப்பாய் பகுதியில் வைத்து குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது
அத்துடன் துப்பாக்கி சூடு நடாத்தியவர்களுக்கு காரை வழங்கிய நபர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேக நபர் இந்த ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டிருந்துள்ளார்.
சந்தேக நபர்கள் அவர்களின் வளர்ப்பு நாய் ஒன்றையும் தம்வசம் வைத்திருந்தனர்
அத்துடன் சந்தேக நபர்கள் 7 பேர் உட்பட அவர்களின் வளர்ப்பு நாய் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்
இதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்











