மஹரகம, பன்னிபிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்ட வீடொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது
மஹரகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பன்னிபிட்டிய பகுதியில் குறித்த வீட்டினை வாடகைக்கு எடுத்து பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ” இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபா பெறுமதியுடைய போதைப்பொருட்கள் உட்பட பொதியிடல் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது பிரதான சந்தேக நபர் உட்பட் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.











