கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

3 hours ago

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகபரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இதேவேளை 246 521 பாடசாலை பரீட்சாத்திகள் மற்றும் 94 004 தனியார் பரீட்சாத்திகள் உள்ளடங்கலாக மொத்தமாக 340 525 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்

அத்துடன் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெறும் காலங்களில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக எதிர்நோக்கும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பரீட்சைகள் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது

ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படுமிடத்து மாணவர்கள் 117 என்ற துரித இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையத்தின் 0113 66 8026 மற்றும் 0113 66 8032 அல்லது 0113 66 8087ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது