ரவிராஜ் கொலை பற்றி தெரிந்துள்ள மனம்பெரியை மீள விசாரிக்க கோரும் முதுகெலும்பு இன்று ஆளும் அனுர அரசின் உறுப்பினர்களுக்கு இருக்கின்றதாவென கேள்வி எழுப்பியுள்ளன தமிழ் தரப்புக்கள்.
ரவிராஜ் அவர்களின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வாளர்கள் ஐவரும் 2015இல் முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர்.கொலைக்கு இன்றுவரை நீதி நிலை நாட்டப்படவில்லை.
இதனிடையே கொலைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைதானவர் தான் இன்று பாரிய ஐஸ் போதைப் பொருள் மூலப்பொருளை வைத்திருந்தாக கைதாகியிருந்த சம்பத் மனம்பெரி. ரவிராஜ் கொலையில் அவர் பின்னர் அரச தரப்பு சாட்சியாகவும் மாறியிருந்தார்.மகிந்த தரப்புடன் நெருங்கிய உறவையும் அவர் பேணியிருந்தார்.
அதேவேளை இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஜேவிபியின் தமிழ் உறுப்பினர்கள்; கொலைக்கு முதலைக் கண்ணீர் வடிப்பது தான் பெரும் ஆச்சர்யம்.
கொலையின் பின்னர் வெளியிட்ட மோசமான அறிக்கையில் ரவிராஜின் அரசியல் கருத்துக்களுடன் நாங்கள் உடன்படவில்லை. கொலைகார பிரிவினைவாத புலி பயங்கரவாதிகளின் அரசியல் பாரம்பரியம், அவர்களின் அரசியல் எதிரிகளை கொடூரமாக கொலை செய்வதேயாகுமென புலிகள் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.












