அனுர அரசின் 2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கென கூடிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் முன்னைய காலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட இராணுவத்தளபாடங்களை பேணிபாதுகாக்க இலங்கை அரசு கூடிய நிதிகளை ஒதுக்கத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் நான்கு எம்.ஜ 17 உலங்குவானூர்திகளை அவசரமாக பழுதுபார்ப்பதற்கான பல மில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு உலங்குவானூர்திக்கு சுமார் 150 கோடி மதிப்பீட்டில் மொத்தமாக 450 கோடி நிதியை ஒதுக்கி திருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கையின் 79ஆவது வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












