இன்று பிற்பகல் புத்தள – மொனராகலை பிரதான வீதியில் பதினொன்றாவது தூண் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மேலும், பேருந்தில் பயணித்த பலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், கவலைக்pடமான காணங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











