இலங்கையில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (Social Security Contribution Levy) நடைமுறைக்கு வருவதால் வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடும் என பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் சுமார் 100 இலட்சம் ரூபாய் (ஒரு கோடி) பெறுமதியுடைய இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வாகனத்தின் விலையில் 2.5 சதவீதம் விலையேற்றம் ஏற்படும் என கூறப்படுகின்றது.
அதன்படி, 100 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம் சுமார் 250,000 ரூபாயால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய வங்கி ஆளுநரின் கருத்து
இதேவேளை எதிர்வரும் காலங்களில் இலங்கையின் வாகன இறக்குமதியில் சிக்கல் ஏற்படலாம் எனவும் வாகன இறக்குமதியால் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இலங்கையின் நிதி இலக்குகள் அடையப்பட்டதற்கு, எதிர்பாராத வகையில் நிகழ்ந்த வாகன இறக்குமதியே முதன்மைக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
1,400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியுடைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவாக, யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் அரசாங்கத்திற்குக் கணிசமான வரி வருமானம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!











