மூச்சு விட மறுக்கிறது அரசு:சமவுரிமை இயக்கம்!

3 hours ago

செம்மணி விவகாரத்தில் தொடர்ச்சியாக மௌனத்தைக் கடைப்பிடிக்கும் அரசு நீதியான விசாரணைக்கு இன்னமும் தயாராக இல்லை என்பதை ஒட்டு மொத்த மக்களுக்கும் கூற வேண்டியுள்ளதாக சமவுரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.

சமவுரிமை இயக்கத்தின் சார்பாக செம்மணியை மீண்டும் புதைக்காதே என்ற விடயத்தை மையப்படுத்தி போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தோம். அதில் பல சிங்கள நண்பர்கள் கலந்துகொண்டார்கள். 

சோமரட்ன ராஜபக்ச கடத்தல்கள் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பாக சாட்சியம் வழங்கத் தயாராக இருப்பதாக கூறியும் முதற்கட்ட நடவடிக்கைகள் கூட இடம்பெறவில்லை.

அதே போல் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டமை தொடர்பாகவும், இசைப்பிரியா தொடர்பாகவும் சரத் பொன்சேகா தகவல்களை வழங்கியும் எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.

முன்னாள் கடற்படைத் தளபதி உலுகத்தென்ன என்கின்ற திருகோணமலை வதை முகாம் பற்றி தகவல் தெரிவித்தும் எந்தவித விசாரணையும் இடம்பெறவில்லை.

நூற்றுக்கனக்கான மனித எச்சங்கள் கொழும்புத் துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டும் அது அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தும் அது தொடர்பாகவும் எந்த நடவடிக்கைகளும் இல்லை. பயங்கரவாதச் தடைச் சட்டம் இன்று வரை நீக்கப்படவில்லை . அரசியல் கைதிகள் விடுதலை முடியாதென்று கூறிவிட்டார்கள் எனவும் சமவுரிமை இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.