November 5, 2025
நியூயார்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நியூயார்க்கின் இளம் மேயராகவும், முதல் முஸ்லிம் மேயராகவும், ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயராகவும் இருப்பார்.
இவர் இந்திய திரைப்பட இயக்குநர் மீரா நாயர் மற்றும் மஹ்மூத் மம்தானியின் மகனாவார். மஹ்மூத் மம்தானி மும்பையில் பிறந்தவர் மற்றும் அவர் ஓர் கல்வியாளர்.
நியூ யார்க் தவிர விர்ஜினியா மற்றும் நியூ ஜெர்சியிலும் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.














