முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
அகழ்வு நடவடிக்கை
இதனடிப்படையில், நீதிமன்ற அனுமதியுடன் குறித்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனரக இயந்திரம்கொண்டு குறித்த பகுதி 15 அடிக்கு மேல் தோண்டியும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி கைவிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு அண்மையில் ஏற்கனவே பாரிய படைமுகாம் ஒன்று போரின் பின்னர் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!















