போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மொத்தம் 1,053 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து ஒன்பது நபர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் 19 பேருக்கு எதிராக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக, நடவடிக்கையின் போது அடையாளம் காணப்பட்ட நான்கு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மறுவாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய சோதனைகளின் போது 3 கிலோ கிராம் 321 கிராம் ஹெரோயின், 1 கிலோ கிராம் 107 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (‘ஐஸ்’), 54 கிலோ கிராம் 434 கிராம் கஞ்சா மற்றும் 11 கிலோ கிராம் 325 கிராம் ‘ஹாஷிஷ்’ ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.











