பதுளை, ரிதிமாலியத்த பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட ஊரகொட்டுவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதான சந்தேகநபர்கள் 27 முதல் 67 வயதுக்குட்பட்ட ரிதிமாலியத்த, மஹியங்கனை, அரவத்த, ரிதிகஹா மற்றும் தெஹியத்தகண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள்.
மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











