2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாளை (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.










