தோனியின் ஓய்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு..! சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிச்சித் தகவல்

9 hours ago

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவது குறித்து நீண்ட காலமாக நிலவி வந்த ஊகங்களுக்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் (Kasi Viswanathan) எம்எஸ் தோனி இன்னும் தனது ஓய்வு முடிவை எடுக்க மாட்டார் என்றும், 2026 ஐபிஎல் தொடரில் இடம்பெறுவார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

யூடியூப் (You tube) தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தோனி எப்போது ஓய்வு பெறுவார்

சிறுவன் ஒருவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், மகேந்திர சிங் தோனி 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.  

சிறுவன் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று கேள்வி எழுப்பிய போது,  நான் அவரிடம் கேட்டுவிட்டு வந்து உங்களுக்குச் சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், எதிர்கால வெற்றியின் நிச்சயமற்ற தன்மையையும் விஸ்வநாத் ஒப்புக்கொண்டார். சிஎஸ்கே அடுத்த ஐபிஎல் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது ​​அவர் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் நாங்கள் வெல்ல முடியுமா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார்

இந்த அறிவிப்பு சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!