தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அதிரடியாக கைது

10 hours ago

தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) ஹிங்குரக்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிங்குரக்கொட காவல்துறை அதிகாரிகள் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உறுப்பினரின் சகோதரர் மின்சார சபையின் ஊழியர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடையவராக ஹிங்குரக்கொட காவல்துறையினரால் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார்.

சரீரப் பிணை

அதன் பின்னர், குறித்த பிரதேச சபை உறுப்பினர், தமது சகோதரரை விடுவிக்குமாறு கோரி காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்த அதிகாரிகளை அச்சுறுத்தியதாக கூறப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அதிரடியாக கைது | National Peoples Power Member Arrested Today

இதனை அடுத்து காவல் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதான பிரதேச சபை உறுப்பினர், ஹிங்குரக்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகோதரரையும் பிணையில் விடுவிக்குமாறு ஹிங்குரக்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!