30 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

2 hours ago

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று (05) காலை ஹஷிஷ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் சுமார் 12 கிலோகிராம் எடைகொண்டதாகும்.

அதன் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடற்கரையின் அருகிலுள்ள சுற்றுலா விடுதியின் ஊழியர்கள் சந்தேகத்திற்கிடமான பொதியை கவனித்து உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதியை மீட்டதுடன் சோதனையை நடத்தினர்.

இதன்போது, அதில் இருந்தது ஹஷிஷ் போதைப்பொருள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.