முன்னாள் இலங்கை தூதருக்கு ரஷ்யாவின் கெளரவ விருது!

3 hours ago

இலங்கை-ரஷ்ய நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளரும், இலங்கையில் உள்ள ரஷ்ய புவியியல் சங்கத்தின் தலைவருமான சமன் வீரசிங்கவுக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் கௌரவங்களில் ஒன்றான நட்புறவு விருதை (Orden Druzhby) பெற்றுள்ளார்.

ரஷ்ய தேசிய ஒற்றுமை தினத்தன்று (04) மொஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் சமன் வீரசிங்கவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த விருதினை வழங்கி கெளரவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் சமன் வீரசிங்க பல தசாப்த கால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டது.

சமன் வீரசிங்க 2015 முதல் 2018 வரை ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதராகப் பணியாற்றினார்.

தற்போது இலங்கை-ரஷ்ய நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் கொழும்பில் உள்ள ரஷ்ய புவியியல் சங்க மையத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.