விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிச்சென்ற CID க்கு காத்திருந்த ஏமாற்றம்

11 hours ago

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.  

குறித்த அகழ்வு பணி முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று (04.11.2025) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் இரகசிய தகவல் கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிச்சென்ற CID க்கு காத்திருந்த ஏமாற்றம் | Excavation Search Operation Ltte Weapons And Gold

கனரக இயந்திரம் கொண்டு குறித்த பகுதி 15 அடிக்கு மேல் தோண்டியும் எதுவும் கிடைக்காத நிலையில் தண்ணீர் தான் வெளிவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அவர்கள் அகழ்வுப்பணியினை கைவிட்டு சென்றுள்ளனர்.

குறித்த பகுதிக்கு அண்மையில் பாரிய படைமுகாம் ஒன்று போரிற்கு பின்னர் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!