Courtesy: கபில்
வவுனியா மாநாகரசபையினால் வீதியோர வியாபாரத்தில் முன்னர் ஈடுபடாதவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கடைகள் வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த விடயத்தில் முறைக்கோடுகள் நடந்துள்ளதா என ஆராயப்பட வேண்டும் என தெரிவித்து ஆளுநருக்கு மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மாநாகரசபையினால் 135 அங்காடி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
கடை ஒதுக்கீடு
வவுனியா மாநகரசபை அமைக்கப்பட்டதன் பின்னராக வவுனியா இலுப்பையடி பகுதி மற்றும் நகரை சூழ்ந்த வீதியோர அங்காடி வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டிருந்தன.

அவ்வாறு அகற்றப்பட்டவர்களிற்கு வவுனியா காவல்நிலையத்திற்கு முன்பாக 60 வியாபாரிகளிற்கும், மாநகரசபையின் முன்பாக அமைந்த காணியில் 75 வியாபாரிகளிற்கும் கடைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே முன்னர் வியாபாரத்தில் ஈடுபடாதவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கடைகள் வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வெளியாகியுள்ளது.












