2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்கள் வருமான வரி அறிக்கைகளை நிகழ்நிலையில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டநடவடிக்கை
2017 ஆம் ஆண்டு 24 ஆம் எண் உள்நாட்டு இறைவரி சட்டத்தின்படி, உரிய திகதியில் வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை 1944 என்ற எண்ணில் அழைப்பதன் மூலமோ அல்லது www.ird.gov.lk என்ற வலைத்தளத்திலோ அல்லது அருகிலுள்ள உள்நாட்டு இறைவரி பிராந்திய அலுவலகத்திலோ பெறலாம்.











