மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

1 week ago

மெக்சிகோவில் வெள்ளத்தால் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய எலியை ராணுவ வீரர் ஒருவர் மீட்டக் காட்சி வைரலாகி உள்ளது.

மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏராளமான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போசா ரிகாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கிய எலி ஒன்று உயிருக்குப் போராடி கொண்டிருந்தது.

இதனை கண்ட ராணுவ வீரர் ஒருவர் அதனை பத்திரமாக மீட்டு, தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றினார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.