ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் தொலைபேசியில் பல அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் சேமிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அதனைதொடர்ந்து, தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மேலதிக விசாரணைக்காக அவர் நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நெருங்கிய அரசியல் தொடர்புகள்
அத்துடன், தனது கணவர் மற்றும் மகன் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினான அவரின் மனைவியும் பதவி விலகியதோடு, இந்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், கைது செய்யப்பட்ட அதிபரின் தொலைபேசியை ஆராய்ந்ததில் அவர் சமீப காலங்களாக ஏராளமான அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைப்பேசியில் அரசியல்வாதிகளின் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.











