இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்

9 hours ago

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் வெளிநாட்டு பணவணுப்பல் மூலம் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி 

இந்த வருமானம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 20.1 சதவீதம் அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர் | Sri Lanka Receives 712 Mil Usd In Foreign Exchange

இதேவேளை, மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலா வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2025 இன் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த சுற்றுலா வருமானம் 2.47 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

இது 2024 இன் முதல் ஒன்பது மாதங்களில் பதிவான 2.34 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 5.3% அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!