பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலம்! “அங்குதான் பயிற்சி அளித்தார்கள்!” – ஐ.எஸ். பயங்கரவாதியின் நேரடி வாக்குமூலம்..!!!

5 days ago

பாகிஸ்தான் எப்போதும் மறுத்துவந்த நிலையில், இப்போது அதன் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்ட ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம், பயங்கரவாதப் பயிற்சி முகாம்களைப் பாகிஸ்தான் நடத்துகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆப்கானிய ஊடகமான ‘Tolo News’ வெளியிட்டுள்ள தகவலின்படி, சயீதுல்லா என்ற பெயருடைய அந்தப் பயங்கரவாதி, தான் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் பயங்கரவாதப் பயிற்சி பெற்றதையும் அதிர்ச்சி விவரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.


ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்ட காணொளியில், தான் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ‘முகமது’ என்ற பெயரில் தோர்காம் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததாகச் சயீதுல்லா ஒப்புக் கொண்டுள்ளார். “பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில், அவர்கள் என்னை மலைகளுக்கு அழைத்துச் சென்று, எனது மனதைக் கடுமையாகத் தீவிரமயமாக்கி, பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தயார் செய்தனர்” என்று ஐ.எஸ். பயங்கரவாதி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

Taliban releases video of Pak ISIS fighter detailing Lashkar-linked training

The video sheds light on cross-border terror recruitment and training linked to Lashkar-e-Taiba. It features Saeedullah, a Pakistani national from Plarman village in Mohmand Agency, detailing how he was… pic.twitter.com/FkoyoVD9xQ

— IndiaToday (@IndiaToday) October 30, 2025

“>

இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கான பாதுகாப்பான இல்லங்கள், பயிற்சியாளர்கள், ஆயுதங்கள் மற்றும் சித்தாந்தம் என அனைத்தையும் பாகிஸ்தான் வழங்குகிறது என்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. இராணுவ ஆய்வாளர் யூசுப் அமீன் சஜாய், “பயங்கரவாதத்தை ஆப்கானிஸ்தான் உற்பத்தி செய்யவோ அல்லது அடைக்கலம் கொடுக்கவோ இல்லை; இந்தத் தீவிரவாதிகளுக்கு நிதி அப்பிராந்தியத்திலிருந்தே கிடைக்கிறது” என்று கூறினார்.

இதன் மூலம், பயங்கரவாதப் பயிற்சியின் மையப்புள்ளியே பாகிஸ்தான் தான் என்ற அசைக்க முடியாத ஆதாரம் கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Ramkumar

பணிவு மற்றும் இரக்கத்தின் சின்னம்! துபாய் மன்னர் ஷேக் முகமது செய்த செயல்! நெட்டிசன்களை உருக வைத்த ஆச்சரியக் காட்சி..!!!

துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பிரதமருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம், பொது இடத்தில் அவர் செய்த கனிவான செயலால் தற்போது இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். வைரலாகப் பரவி வரும் ஒரு காணொளியில், மன்னர்…

Read more

இந்தியருக்கு நடந்த கோரம்…. காரில் சிறுநீர்… தலையில் அடித்த கொலைகாரன்! – கனடாவில் உயிரிழந்த தொழிலதிபர்! கதறும் குடும்பம்…!!

கனடாவின் எட்மண்டன் நகரில், காரில் சிறுநீர் கழித்ததைக் கண்டித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதுத் தொழிலதிபர் அர்வி சிங் சாகூ (Arvi Singh Sagoo) கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி…

Read more