பண்டிவிருச்சான் துயிலுமில்ல சிரமதான பணிகள் முன்னெடுப்பு

1 day ago

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் நவம்பர் (27) ம் திகதி தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் நினைவு நிகழ்வுக்காக தயாராக ஆரம்பித்துள்ளது.

பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லம்

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது.

பண்டிவிருச்சான் துயிலுமில்ல சிரமதான பணிகள் முன்னெடுப்பு | Pandivirichan Thuyum Home Charity Work

குறித்த ஆரம்ப நாள் நிகழ்வு மற்றும் சிரமதானப்பணியில் முன்னால் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள்,துயிலுமில்ல பணி குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி - நயன்

GalleryGalleryGallery