“நீங்க பேண்ட் போட்டு இருக்கீங்களா?”… நீதிபதியுடன் கான்ஃபரன்ஸ் விசாரணையில் அரைகுறை ஆடையுடன் தோன்றிய போலீஸ்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

4 days ago

டெட்ராய்ட் போலீஸ் அதிகாரி ஒருவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த நீதிமன்ற விசாரணையில் பேண்ட் இல்லாமல் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் 36வது மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த இந்த மெய்நிகர் விசாரணையில், அதிகாரி மேத்யூ ஜாக்சன் போலீஸ் சீருடை சட்டை மட்டும் அணிந்திருந்தார்.

கீழே ஷார்ட்ஸ் போன்ற உள்ளாடை மட்டுமே இருந்ததைப் பார்த்த நீதிபதி சீன் பி. பெர்கின்ஸ், “அதிகாரி, பேண்ட் போட்டிருக்கீங்களா?” எனக் கேட்டார். அதற்கு ஜாக்சன், “இல்லை ஐயா” எனப் பதிலளித்துவிட்டு, கேமராவை மேலே திருப்பி இடுப்புக்கு மேல் மட்டும் காட்டினார்.

Judge left in shock after a Detroit police officer appeared at a Zoom court hearing without pants 👖🩲 pic.twitter.com/tmPUWXB2kZ

— SAY CHEESE! 👄🧀 (@SaycheeseDGTL) October 29, 2025

நீதிமன்ற விதிமுறைகளின்படி, மெய்நிகர் விசாரணையிலும் தொழில்முறை உடையே கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து டெட்ராய்ட் போலீஸ் தலைவர் டாட் பெட்டிசன், “எங்கள் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கண்ணியமாகவும் தொழில்முறையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவம் துறையின் தரத்துக்கு ஏற்றதல்ல, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் தாட்டானிஷா ரீட், “போலீஸ் அதிகாரியே இப்படியா என அதிர்ச்சியாக இருந்தது” எனக் கூறினார்.

Babblumagesh30

சிங்கத்தின் வேட்டையைத் தொட்டாலும் கோபம் இல்லை! இறைச்சியை சமைத்துப் பகிர்ந்த மனிதர்! நெகிழ்ச்சியில் உறைந்த வைரல் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது அதிசயிக்க வைக்கும் ஒரு காணொளி வைரலாகப் பரவி வருகிறது. அதில், ‘சிக்ரா’ (Sigra) என்று பெயரிடப்பட்ட ஒரு பெண் சிங்கம் தான் வேட்டையாடிய மாமிசத்தை சமைப்பதற்காக ஒரு மனிதருடன் பகிர்ந்துகொள்வது காட்டப்பட்டுள்ளது. இந்தச் சிங்கத்தின் பராமரிப்பாளரான வாலண்டின்…

Read more

பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலம்! “அங்குதான் பயிற்சி அளித்தார்கள்!” – ஐ.எஸ். பயங்கரவாதியின் நேரடி வாக்குமூலம்..!!!

பாகிஸ்தான் எப்போதும் மறுத்துவந்த நிலையில், இப்போது அதன் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்ட ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம், பயங்கரவாதப் பயிற்சி முகாம்களைப் பாகிஸ்தான் நடத்துகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிய ஊடகமான ‘Tolo News’…

Read more