சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த இதமான தருணம் தற்போது இணையத்தில் பலரின் இதயத்தையும் தொட்டுள்ளது. விமானப் பயணத்தின் போது ஒரு ஏர்ஹோஸ்டஸ், முதிய பயணிக்கு தனது கைகளால் மெதுவாக உணவளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் மிகுந்த பொறுமையுடனும், அன்புடனும் அந்த முதியவரை கவனித்துக் கொண்டிருப்பது வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது.
لذلك موظيفين
#الخطوط_السعودية في المركز 🥇عالميًا
مشهد يجسد القيم السعودية الأصيلة 🇸🇦
مضيف جوي يطعم راكبًا مسنًّا طوال الرحلة باهتمام يليق بالضيافة السعودية 💚✈️ https://t.co/i3Fln8qSNh pic.twitter.com/KTzcWZqIhy
— الطيران السعودي (@saudia_aviation) October 29, 2025
இந்த வீடியோவை Saudia Aviation நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. “சவூதி மரபு மதிப்புகளின் உண்மையான பிரதிபலிப்பு இது. ஒரு ஏர்ஹோஸ்டஸ், முழுப் பயணத்தின் போதும் முதிய பயணிக்கு அன்புடனும் மரியாதையுடனும் உணவளித்தார்” என்று அந்த பதிவு குறிப்பிடுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அந்த பணியாளரின் மனிதாபிமானத்தையும் பொறுமையையும் பாராட்டி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “இவ்வளவு மனமுள்ள பணியாளரை வேலைக்கு அமர்த்தும் சவூதி குழுமத்துக்கு நன்றி,” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். “அந்த முதியவருக்கு பார்கின்சன்ஸ் நோய் இருப்பது போல தெரிகிறது… அவருக்கு இறைவன் நலமளிக்கட்டும்,” என மற்றொருவர் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானச் செயல் பலரையும் கவர்ந்து, “இன்னும் உலகத்தில் நன்மை உயிருடன் இருக்கிறது” எனப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Muthu Kumar
“அம்மாடியோ அம்புட்டும் பணம்..! “டிரக்கில் இருந்த பணத்தை காற்றில் பறக்க விட்ட நபர்… குப்பை போல் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகள்… வைரலாகும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!!!
வெனிசுவேலாவின் மோசமடைந்த பணவீக்க நெருக்கடியை சமூக வலைதளங்களில் வெளியாகிய வீடியோ வைரலாகியுள்ளது. பொது போராட்டம் அல்லது கூட்டத்தில், டிரக் ஒன்றில் நிறைந்த பண நோட்டுகளை ஒரு ஆண் கூட்டத்தின்மீது எறிந்து வீசுவதும், மக்கள் சந்தோஷத்தில் கத்தி பதிவு செய்வதும், தரையில் சிதறிய…
“குட் மார்னிங் ஆஸ்திரேலியா” – இந்திய மகளிர் கொடுத்த ஷாக்… உலகக் கோப்பை தோல்விக்கு ஆஸி. மீடியா கண்ணீர்…!!
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு, ஆஸ்திரேலிய ஊடகங்களின் எதிர்வினைகள் பரபரப்பாக இருந்தன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் தோல்வியைச் சுட்டிக்காட்டி ஃபாக்ஸ் கிரிக்கெட் (Fox Cricket) வெளியிட்ட செய்தி கவனத்தை…











