ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் 700 பேர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வேட்புமனுவில் விதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுடன், அவர் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த சாமியா சுலுஹூ ஹாசன் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தன்னிச்சையான முடிவுக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மக்களின் இந்த எதிர்ப்புப் போராட்டம் படிப்படியாக கடுமையான வன்முறையாக மாறியது. தலைநகரம் மற்றும் முக்கியப் பகுதிகளில் வெடித்த இந்த வன்முறைச் சம்பவங்களில், இதுவரை 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரித்ததைக் கண்டித்து நடந்த இந்த வன்முறைச் சம்பவங்களால் தான்சானியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையும், ராணுவமும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Ramkumar
நடுவானில் பறந்த விமானம்… முதியவருக்கு உணவளித்த விமான ஊழியர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த இதமான தருணம் தற்போது இணையத்தில் பலரின் இதயத்தையும் தொட்டுள்ளது. விமானப் பயணத்தின் போது ஒரு ஏர்ஹோஸ்டஸ், முதிய பயணிக்கு தனது கைகளால் மெதுவாக உணவளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் மிகுந்த…
“அம்மாடியோ அம்புட்டும் பணம்..! “டிரக்கில் இருந்த பணத்தை காற்றில் பறக்க விட்ட நபர்… குப்பை போல் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகள்… வைரலாகும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!!!
வெனிசுவேலாவின் மோசமடைந்த பணவீக்க நெருக்கடியை சமூக வலைதளங்களில் வெளியாகிய வீடியோ வைரலாகியுள்ளது. பொது போராட்டம் அல்லது கூட்டத்தில், டிரக் ஒன்றில் நிறைந்த பண நோட்டுகளை ஒரு ஆண் கூட்டத்தின்மீது எறிந்து வீசுவதும், மக்கள் சந்தோஷத்தில் கத்தி பதிவு செய்வதும், தரையில் சிதறிய…











