கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டாக தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை கிளப்பியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கோவை ஒண்டிப்புதூர் அருகே இளைஞர் ஒருவர் தொலைபேசி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
குறித்த இளைஞருக்கும் பாதிக்கப்பட்ட மாணவியும் பழக்கமுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கோவை விமான நிலையம் பின்புற பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் அந்த மாணவியும் மற்றும் இளைஞரும் சந்தித்துள்ளனர்.
இந்தநிலையில், காரில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்த நேரம் அங்கு மூன்று பேர் கொண்ட கும்பல், இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, காரை அடித்து நொறுக்கி இளைஞரை தாக்கி விட்டு மாணவியை தூக்கி சென்றுள்ளனர்.
தொடர்நது மாணவியை கூட்டாக சேர்ந்து தகாத முறைக்கு உட்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் பீளமேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
பின்பு, காவல்துறையினர் மாணவியையும் மற்றும் இளைஞரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தனிப்படைகள்
சம்பவம் தொடர்பில் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தப்பியோடியவர்களை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், முதல்கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டதில் இரண்டு பேர் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதும், ஒருவர் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, அவர்கள் கோவில்பாளையத்தில் ஒரு டிவிஎஸ் 50 வண்டியை திருடி வரும் வழியில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்வத்திற்கு கடும் கண்டங்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









