ஜமைக்காவை புரட்டிப்போட்ட ‘மெலீசா’ புயல்!

5 days ago

பசிபிக் பெருங்கடலில் நிலைகொண்ட மெலிஸா புயல் மணிக்கு 295 கி.மீ வேகத்தில் ஜமைக்காவில் கரையை கடந்தது.

பசிபிப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி புயலாக வலுப்பெற்றது. ‘மெலீசா’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல் ஜமைக்கா அருகே உள்ள கடலில் நிலை கொண்டது.

கடந்த 174 ஆண்டுகளில் இதுவரை உருவான புயல்களிலேயே மிகவும் அபாயகரமான அதிதீவிர புயலாக மெலீசா வலுப்பெற்றது.

இந்நிலையில், மெலிஸா புயல் மணிக்கு 295 கிமீ வேகத்தில் ஜமைக்காவின் செயிண்ட் எலிசபெத் பகுதியில் கரையை கடந்தது.

மெலிசா தாக்கத்திற்குப் பிறகு செயிண்ட் எலிசபெத், பாரிஷ் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. அதுதொடர்பான ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.