அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் பதவி வெற்றிடத்திற்கான புதிய தவிசாளர் எதிர்வரும் 28ஆம் திகதி தெரிவு செய்யப்படுவார் என அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தென் பிராந்திய உள்ளூராட்சி சபைக்கான ஆணையாளர் நாயகம் எராண்டி உமங்கா மெண்டிஸ் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பிரதேச சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி வெற்றிடம்
முன்னதாக, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர (Lasantha Wickramasekara) அண்மையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததை அடுத்து குறித்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே, குறித்த பதவிக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கடந்த 22 ஆம் திகதி அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!











