சீனாவுக்கு எதிராக முக்கிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்ட கனடா

1 day ago

கனடாவும் பிலிப்பின்ஸும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்சீன கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிா்கொள்ளும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, பிலிப்பின்ஸ் பாதுகாப்பு அமைச்சா் கில்பொ்டோ தியோடோரோ ஜூனியா் மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சா் டேவிட் மெக்கிண்டி ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இராணுவப் படை

இரு நாடுகளின் இராணுவப் படைகளுக்கும் இடையே கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எதிராக முக்கிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்ட கனடா | Canada Philippines Sign Defense Pact

இதனடிப்படையில், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்று பிலிப்பின்ஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!