சீனாவின் நெக்ஸ்ப்ரீயா நிறுவனத்தை நெதர்லாந்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் விளைவு, ஆட்டோமொபைல் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களின் உயிர் நாடியான “சிப்”இன் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், பிரபல கார் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயமும் எழுந்துள்ளது.
21-ஆம் நூற்றாண்டின் உண்மையான சக்தி, வலிமை சிறிய CHIP-இல் குவிக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போன்று, அளவில் சிறியதாக இருந்தாலும் உலகின் முன்னேற்றத்தை வேகமாக இயக்கும் வலிமை CHIP-இல் பொதிந்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள், கணினிகள், வாகனங்கள் முதல் போர் ஆயுதங்கள் வரை அனைத்திற்கும் உயிர் நாடியாக இருப்பது இந்த CHIP-கள் தான். செமிகண்டக்டர் துறையில் அமெரிக்கா ஒருபுறம் கோலோச்சி வந்தாலும், இதே துறையில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியிலும் வேகமாக ஈடுபட்டு வருவது சர்வதேச சமூகம் அறிந்த உண்மை.
சூப்பர் கம்யூட்டர்கள், ஏ.ஐ., தொழில்நுட்பம், ராணுவ தளவாட உற்பத்தியில் மேம்படுத்த CHIP-கள் இதய துடிப்பாகவே மாறியுள்ளன. சீனாவின் லிங்டெக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் CHIP தயாரிப்பாளரான நெக்ஸ்பீரியா, நெதர்லாந்தில் பிரமாண்டமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கார்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு பொருட்களுக்கான சிப்களை தயாரித்து சந்தைப்படுத்திய வருகிறது.
ஆனால் 21ம் நூற்றாண்டின் வலிமை சிப் தயாரிப்புதான் என கருதப்படும் நிலையில், தொழில்நுட்ப அறிவுசார் திருட்டு என்ற குற்றச்சாட்டு, நெக்ஸ்பீரியாவுக்கு செக் வைத்துள்ளது. அதன் பேரில் நெக்ஸ்பீரியா நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது நெதர்லாந்து.
இதன் மூலம் தங்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை, தடுக்கவோ, நிறுத்தவோ முடியும் என்று நம்புகிறது. இது ஒருபுறமிருக்க CHIP-கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் சீனாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள், ஐரோப்பாவின் வாகன விநியோக சங்கியிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இது சீனாவுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பப் போட்டியில பதற்றத்தை அதிகரித்துள்ளன.. ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன், CHIP பற்றாக்குறையால், உற்பத்தியை நிறுத்திவிடக்கூடும் அபாயம் எழுந்திருக்கிறது.. இந்த முட்டுக்கட்டைக்கு மத்தியில் உற்பத்தியைப் பாதுகாக்க விநியோகஸ்தர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக BMW, MERCEDES-BENZ நிறுவனங்கள் கூறியுள்ளன.
ஜெனரல் மோட்டார்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா கூற்றுப்படி, சீனாவின் CHIP மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கார் உற்பத்தியைப் பாதிக்கும் சாத்தியம் உள்ளது தெரியவந்துள்ளது. நெக்ஸ்பீரியாவின் CHIP-கள், கார் உற்பத்திக்கு இன்றியமையாதவையாகவே உள்ளன.
இவை பெரும்பாலும் சீன சந்தையையே நம்பியுள்ளன. அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு,. சீனாவின் அரிய மண் ஏற்றுமதி வரம்பு போன்ற உலகளாவிய வர்த்தக பதற்றங்களுடன், CHIP-கள் மீதான புதிய கட்டுப்பாடு, ஐரோப்பியாவின் கார் தயாரிப்பாளர்களையும், விநியோக சங்கிலியையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
அறிவுசார் சொத்துரிமை கவலை காரணமாக நெதர்லாந்து அரசு நெக்ஸ்பீரியாவை கையகப்படுத்தியது, ஐரோப்பிய வாகன உற்பத்திக்குத் தேவைப்படும் அரியவகை மண் உள்ளிட்ட கனிமவளங்கள் ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க சீனாவை தூண்டியது. உலகளாவில் ஆட்டோமொபைல்துறைக்கு தேவைப்படும் CHIP-களை சீனாவுக்கு சொந்தமான நெக்ஸ்பீரியாதான் விநியோகித்து வருகிறது.
நெக்ஸ்பீரியாவின் CHIP-கள் ஆட்டோமொபைல் துறையில் மிகவும் மதிப்புமிக்க விநியோக சங்கலியாகவும் உள்ளது.. AIRBAG, ENTERTAINMENT SYSTEM, AUTOMATIC FEATURES, ENGINE, ElECTRIC CAR, BATTARY என அனைத்திலும் சிப்-களின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதன் விநியோக பாதிப்பு, கார் உற்பத்தியையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒருவேளை சிப்-விநியோக சங்கிலி உடைந்தால், சீனா சிப்-களுக்கு மாற்றான சந்தையை தேட வேண்டிய சூழல் உருவாக்கும். பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது ஆலைகளைத் தற்காலிகளை மூடவோ, தயாரிப்பை நிறுத்தவோ வேண்டியதிருக்கும் என்பதுதான் தற்போதைய நிலை…. எனவே இந்தியா சொந்தமாகச் சிப் தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.











