சமூக ஊடகங்களில் தற்போது அதிசயிக்க வைக்கும் ஒரு காணொளி வைரலாகப் பரவி வருகிறது. அதில், ‘சிக்ரா’ (Sigra) என்று பெயரிடப்பட்ட ஒரு பெண் சிங்கம் தான் வேட்டையாடிய மாமிசத்தை சமைப்பதற்காக ஒரு மனிதருடன் பகிர்ந்துகொள்வது காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சிங்கத்தின் பராமரிப்பாளரான வாலண்டின் க்ரூனர் (Valentin Gruener), சிங்கம் வேட்டையாடிய முழுமையான ஓரிக்ஸ் கலைமான் இறைச்சியில் இருந்து ஒரு பகுதியை சமையலுக்காக எடுத்துச் செல்வது, சமூக வலைதளப் பயனர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“சமீபத்தில் அவள் வேட்டையாடியதில் இருந்து சிறு பகுதியை எடுத்து நெருப்பில் சமைக்கிறேன். அவளுக்கு அருகில் நெருப்பை மூட்டுவது அரிதான சந்தர்ப்பம். இரவில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு அருகில் குறையும் குளிர்ந்த வறண்ட காலங்களில், எனக்கும் குழுவிற்கும் ஒரு பிட் இறைச்சி எடுப்பது நடக்கும்,” என்று க்ரூனர் அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார். க்ரூனர் கத்தியால் மாமிசத்தை வெட்டி, நெருப்பு மூட்டி சமைத்த பின்னர், சமைத்த இறைச்சியை சிக்ராவுக்குக் கொடுக்கிறார். ஆனால், சிக்ரா அந்தச் சுவையான உணவை மறுத்து, பச்சையான இறைச்சியையே சாப்பிட விரும்புகிறது.
View this post on Instagram
A post shared by Sirga (@sirgathelioness)
“>
“நான் அவளுடைய வேட்டையைத் தொடுவதை சிக்ரா கண்டுகொள்வதில்லை. இந்த நம்பிக்கை பல வருடப் பிணைப்பின் விளைவு. இதை வேறு யாரும் முயற்சி செய்யக் கூடாது. காட்டு விலங்குகளை, குறிப்பாக சிங்கத்தை, இப்படி அணுகக் கூடாது” என்றும் க்ரூனர் எச்சரித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு பிறந்த சிக்ரா, 10 நாட்கள் ஆனதிலிருந்து க்ரூனரால் வளர்க்கப்படுகிறது. தற்போது போட்ஸ்வானாவில் உள்ள 2000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காலாஹரி வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதியில் சிக்ரா வசித்து வருகிறது.
Ramkumar
பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலம்! “அங்குதான் பயிற்சி அளித்தார்கள்!” – ஐ.எஸ். பயங்கரவாதியின் நேரடி வாக்குமூலம்..!!!
பாகிஸ்தான் எப்போதும் மறுத்துவந்த நிலையில், இப்போது அதன் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்ட ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம், பயங்கரவாதப் பயிற்சி முகாம்களைப் பாகிஸ்தான் நடத்துகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிய ஊடகமான ‘Tolo News’…
பணிவு மற்றும் இரக்கத்தின் சின்னம்! துபாய் மன்னர் ஷேக் முகமது செய்த செயல்! நெட்டிசன்களை உருக வைத்த ஆச்சரியக் காட்சி..!!!
துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பிரதமருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம், பொது இடத்தில் அவர் செய்த கனிவான செயலால் தற்போது இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். வைரலாகப் பரவி வரும் ஒரு காணொளியில், மன்னர்…











