நாட்டில் பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொருத்தமற்ற பாலியல் கல்வியை நாட்டின் பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மீரிகம, கீனதெனிய பகுதியில் புனரமைக்கப்பட்ட தேவாலயம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை நேரம் நீடிப்பு
சர்வதேச அமைப்புகளின் அழுத்தத்தின் பேரில், அடுத்த வருடம் (2026) ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மற்றுமொரு சர்ச்சையாக எழுந்துள்ள 2026 ஆண்டு முதல் பாடசாலை நேரத்தை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கும் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, இதற்கு இணங்கப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
“பாடசாலையின் நேர நீடிப்புக்கான முடிவை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது எந்தவொரு உளவியல் அல்லது கல்வி ஆய்வு பூர்வமான முடிவும் அல்ல. எனவே பாடசாலை நேர நீடிப்பு குறித்த தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!











