கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்காக 6500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2 hours ago

பிரஜைகளின் தரவுகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .

கிவ் ஆர் குறியீடுக்காக 5000 க்கு குறைந்த கொடுக்கல் வாங்கலுக்கான சேவை கட்டணம் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

AI தரவு மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அஸ்வெசும பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்காக இணைய சேவை வவுச்சர் வழங்கப்படும்.

டிஜிட்டல் தொழில்நுட்ப கோபுரங்களை அமைப்பதற்கு முதலீட்டு வரியை 5 வருடங்களுக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 6500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.