அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மலையக பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் 2,000 வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 4,290 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.











