2030 ஆம் ஆண்டில் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் தேசிய பாலுற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சாத்தியவள ஆய்வு உள்ளிட்ட ஆரம்பப் பணிகளுக்காக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.











