கரூர் துயரம் :விஜய் கொடுத்த இழப்பீட்டு பணத்தில் மருமகன் கொண்டாட்டம் : மகளை இழந்த தாய் கதறல்

17 hours ago

கரூரில் உயிரிழந்த தனது மகள் சார்பாக விஜய் கொடுத்த பணத்தை தனது மருமகன் கண்டபடி செலவு செய்வதாக மகளை பறிகொடுத்த தாயார் ஒருவர் அழுதுகொண்டே பேட்டியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் தலா ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்கினார்.

இழப்பீட்டு பணத்தை வீணாக செலவு செய்யும் மருமகன்

இந்நிலையில் அந்த இழப்பீடு பணத்தை தனது மருமகன் வீணாக செலவழிப்பதாக மாமியார் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் அவர் ”3 ஆண்டுகளுக்கு முன்பு என் மகளுக்கு திருமணம் நடந்து 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணமான ஒரு வருடத்திலேயே கணவனை பிரிந்து என் மகள் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். இந்நிலையில்தான் விஜய் கூட்டத்தில் என் மகள் உயிரிழந்தார்.  

 மகளை இழந்த தாய் கதறல் | Son In Law Celebrates Compensation Money By Vijay

அதுவரை என் மகளை பார்க்க வராத என் மருமகன், இழப்பீடு கிடைக்கிறது என்றதும், மருத்துவமனைக்கு வந்து என் மகளின் சடலத்தை வாங்கிச் சென்று அடக்கம் செய்தார்.

பேத்தியின் பெயரில் வங்கியில் வைப்புச் செய்ய நடவடிக்கை

மேலும் தவெக சார்பில் வழங்கப்பட்ட ரூ.20 லட்சத்தையும் அவரே சென்று வாங்கிக் கொண்டார். இப்போது அந்த பணத்தை கண்டபடி செலவு செய்து வருகிறார்.

 மகளை இழந்த தாய் கதறல் | Son In Law Celebrates Compensation Money By Vijay

அந்த இழப்பீடு பணத்தை அவரிடமிருந்து பெற்று என் பேத்தியின் பெயரில் வங்கியில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!