கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள்

8 hours ago

பொதுவாக நமது முகம் நன்கு பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் ஆசைப்படுவார்கள்.

தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து கருமையடைந்து காணப்படும். இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.

அந்தவகையில் முகத்தின் கருமை நீங்க சில இயற்கையான பயனுள்ள குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.  

வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்

இந்த வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதும், உங்கள் முகம் பளிங்கு போல் மாறிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • 1. கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்கும்.

    அதற்கு 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள் | Natural Home Remedies For Skin Whitening In 7 Days

  • 2. ஓட்ஸ் ஒரு நேச்சுரல் ஸ்கரப்பர். இந்த ஸ்கரப் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

    பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.  

  • 3. மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.  

வெயிலால் ஏற்பட்ட கருமை

  • 4. எலுமிச்சை சாறு மற்றும் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

    இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.  மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.  

கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள் | Natural Home Remedies For Skin Whitening In 7 Days

  • 5. வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

    இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!