“ஆட்டோமெட்டிக் வேலை அனுமதி நீட்டிப்பு நிறுத்தம்..!”… அமெரிக்காவின் அதிரடி முடிவு… இந்தியர்கள் பெரும் பாதிப்பு..!!!

4 days ago

அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை (EAD) தானாக நீட்டிக்கும் வசதியை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) திடீரென நிறுத்தியுள்ளது. அக்டோபர் 30, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு புதுப்பிப்புக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு இனி தானியங்கி நீட்டிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது H-1B விசா தொழிலாளர்களின் மனைவிகள் (H-4), F-1 மாணவர்களின் நடைமுறைப் பயிற்சி (OPT) பயனாளர்கள், அடைப்பாசிரியர்கள் ஆகியோரை கடுமையாகப் பாதிக்கும். ஏற்கனவே அக்டோபர் 30க்கு முன் தாக்கல் செய்தவர்களுக்கு இது பொருந்தாது. இந்த முடிவு, வெளிநாட்டு தொழிலாளர்களை சரியாகச் சோதித்துப் பார்க்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக H-1B விசாக்களில் 71 சதவீத இந்தியர்கள் உள்ளதால், இந்திய தொழிலாளர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

சமீபத்தில் H-1B விசா கட்டணத்தை ஆண்டுக்கு 1 லட்சம் டாலராக உயர்த்தியதும் இதன் தொடர்ச்சியாகும். விண்ணப்பதாரர்கள் EAD காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பே புதுப்பிப்பு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வேலை இடைவெளிகள், சட்ட சிக்கல்கள் உருவாக்கி, தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகளில் பணியாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Babblumagesh30

அடக்கொடுமையே..! குளியலறையில் 4 முறை நடந்த பிரசவம்… குழந்தைகளை கொன்று அலமாரியில் மறைத்த தாய்… வெளியான பரபரப்பு பின்னணி…!!!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், 39 வயது ஜெசிகா மௌத் என்ற பெண், ஆறு ஆண்டுகளுக்குள் நான்கு குழந்தைகளை தனது குளியலறையில் பிரசவித்து, அவற்றை கொன்று, உடல்களை அலமாரி மற்றும் கூரைக்கூடில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வீட்டு உரிமையாளர்…

Read more

“நீங்க பேண்ட் போட்டு இருக்கீங்களா?”… நீதிபதியுடன் கான்ஃபரன்ஸ் விசாரணையில் அரைகுறை ஆடையுடன் தோன்றிய போலீஸ்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

டெட்ராய்ட் போலீஸ் அதிகாரி ஒருவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த நீதிமன்ற விசாரணையில் பேண்ட் இல்லாமல் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் 36வது மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த இந்த மெய்நிகர் விசாரணையில், அதிகாரி மேத்யூ…

Read more