அரச அதிகாரிகள் தொடர்பில் மக்களுக்கு முக்கிய அறிவுருத்தல்

10 hours ago

அரச அதிகாரிகள் தொடர்பில் மக்கள் மிகவும் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அரச ஊழியர் சரித ரத்வத்தே குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் 

இந்தநிலையில், அவர்களின் நடவடிக்கைகள் நாட்டிற்கு நன்மை பயக்கும் போது பாராட்டப்படாததும் அதே அதிகாரிகள் நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகளில் மட்டும் பழிக்கப்படுவதும் சரியானதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச அதிகாரிகள் தொடர்பில் மக்களுக்கு முக்கிய அறிவுருத்தல் | Public Urged To Treat Government Officials Fairly

சரித ரத்வத்தே, தேசிய இளைஞர் மன்றம் மற்றும் ஜனசவிய போன்ற முக்கியமான திட்டங்களை உருவாக்கி நிர்வாகம் செய்வதில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியுள்ளார் என அவரது கடந்த கால சேவையை வஜிர அபேவர்தன பாராட்டியுள்ளார்.

அரச அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களும் மற்றும் அரசியல் தலைவர்களும் மிகுந்த விழிப்புணர்வுடனும் நீதியுடனும் அணுக வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!