அம்பலாங்கொடை துப்பிக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- விசாரணை தீவிரம்!

17 hours ago

காலியில் அம்பலாங்கொட நகர சபைக்கு அருகில், இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்த வர்த்தகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் துப்பாக்கி சூடு நடாத்திய சந்தே நபர் பயணித்த கார் கைவிடப்பட்ட நிலையில் கரந்தெனிய பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வர்த்தகர், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பலாங்கொட பிரதேச சபைக்கு போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் சிவப்பு நிற காரில் சென்றிருந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் துப்பாக்கி சூடு நடாத்திய சந்தே நபர் பயணித்த கார் கைவிடப்பட்ட நிலையில் கரந்தெனிய பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்த்தகர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த வர்த்தகர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கராந்தெனிய சுத்தாவின் மைத்துனரான, வருச வித்தான மிலாந்த என்ற 56 வயதுடையவர் என்றும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக 04 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சார் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு ரி56 ரக துப்பாக்கியை சந்தேக நபர்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வர்த்தகர், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பலாங்கொட பிரதேச சபைக்கு போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட குற்றவாளிகளினால் 102 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் .

இடம்பெற்றுள்ளதுடன் அதில் 53 பேர் உயிரிழந்து நிலையில் மேலும் 56 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related