அநுர அரசுக்கு எதிராக வெடிக்கவுள்ள பேரணி : வெளியான தகவல்

1 week ago

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பேரணி, நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் அந்தப் பேரணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கத்துக்கு எதிரான இந்த பேரணியை ஏற்பாடு செய்வது குறித்து அரசியல் கட்சிகளுக்கு இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!