இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வட்டிச் செலவு 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டின் (2024) முதல் ஆறு மாதங்களில் ரூ. 1142.1 பில்லியனாக இருந்த அரசாங்கத்தின் மொத்த வட்டிச் செலவு இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ. 1264.6 பில்லியனாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடனுக்கான வட்டி
உள்நாட்டுக் கடனுக்கான வட்டிச் செலுத்துதலின் மதிப்பில் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ. 1073.7 பில்லியனாக இருந்த இது, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ. 1,117.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டுக் கடனுக்கான வட்டிச் செலுத்துதலின் மதிப்பில் 115.2 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ. 68.4 பில்லியனாக இருந்த இது, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ.147.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!










