பிஜி நாட்டில் உபர் ஓட்டுநராக இருந்த 86 வயது முதியவரை சந்தித்தார் இந்திய தொழிலதிபர் நவ் ஷா. பயணத்தின்போது பேச்சுக்கொடுத்து, “பில்கள் எப்படி கட்டுகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் தொழிலதிபர், என் நிறுவனம் ஆண்டுக்கு 175 மில்லியன் டாலர் வியாபாரம் செய்கிறது” என்று புன்னகையுடன் பதிலளித்தார் அந்த ஓட்டுநர். உபர் ஓட்டுவதன் மூலம் வரும் பணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுக்கு 24 பெண் குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறினார்.
“எனக்கு மூன்று மகள்கள். அவர்களுக்கு நல்ல கல்வி கொடுத்தேன், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அதனால் மற்ற பெண்களின் கனவுகளையும் நிறைவேற்ற உதவலாமே என்று நினைத்தேன்” என்று சொன்னார். அவரது தந்தை 1929-ல் 5 பவுண்டுகளுடன் தொடங்கிய தொழில் இன்று 13 நகைக்கடைகள், 6 உணவகங்கள், ஒரு உள்ளூர் செய்தித்தாள், 4 சூப்பர்மார்க்கெட்டுகளாக வளர்ந்திருக்கிறது என்று பெருமையுடன் தெரிவித்தார்.
நவ் ஷா இந்த உரையாடலை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தார். வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கானோர் பாராட்டினர். “உண்மையான வெற்றி உயரத்தில் இல்லை, எத்தனை பேரை உயர்த்துகிறோம் என்பதில்தான்” என்று அவர் எழுதிய கேப்ஷன் பலரையும் ஊக்கப்படுத்தியது. பலரும் “இவரைப்போல உதவி செய்ய வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.
Aadhi Devan
“ஜெய் ஸ்ரீ ராம்!”…. பாகிஸ்தானிய மக்களிடையே முழக்கமிட்ட ரஷ்ய இளைஞர்… மக்கள் செய்த ஆச்சரியமான செயல்… வைரலாகும் வீடியோ..!!!
பாகிஸ்தானின் பரபரப்பான தெருக்களில் ரஷ்ய இளைஞர் ஒருவர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கத்தியபோது, அங்கு கூடிய மக்கள் விரோதமாக எதிர்க்காமல், சிரித்துக்கொண்டே அந்த ஜெபத்தைப் பாடத் தொடங்கியது அதிர்ச்சி தரும் வைரல் வீடியோவாக மாறியுள்ளது. இந்த வீடியோவில், உள்ளூர் உடையை…
“அழுது தப்பிக்கலாமுன்னு நினைக்கிறீர்களா?”… அமெரிக்க கடையில் திருடியதாக பிடிப்பட்ட இந்திய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!
அமெரிக்காவின் டார்கெட் கடையில் பொருட்களை அடையாளம் காட்டாமல் வெளியேற முயன்ற இந்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், போலீஸ் உடல் கேமரா காட்சியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது இந்த ஆண்டின் மூன்றாவது இத்தகைய சம்பவம்; மே மாதத்தில்…











