விசேட பொலிஸ் சோதனையில் 736 பேர் கைது!

3 hours ago

நாடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 736 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதற்கிடையில், மொத்தம் 32,201 நபர்கள் பொலிஸ் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அறிக்கையின்படி, மொத்தம் 21 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 27 பேர் பொறுப்பற்ற ரீதியாக வாகனம் செலுத்தியதற்காகவும், போக்குவரத்து மீறல்கள் தொடர்பாகவும் 4,523 பேர் அடையாளம் காணப்பட்டனர்.